ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

Image result for திருச்செந்தூர்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர்


திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகில் ரவுண்டானா மற்றும் ரயில்வே நிலைய நுழைவுப் பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பெயரில் ஆட்டோ நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த ஆட்டோ நிறுத்த பெயர்ப் பலகையை  பேரூராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை திடீரென்று அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்ததும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் முரசு.தமிழப்பன், ஒன்றிய துணைச் செயலர் மு.தமிழ்பரிதி, நகரச்செயலர் பெரு.மகராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.துரைராஜ், வழக்குரைஞர் முத்துக்குமார், நந்தகுமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் அகற்றப்பட்ட பெயர்ப் பலகையுடன் திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகத்தின் கதவைப் பூட்டி திடீரென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வெ.கோபால், காவல் ஆய்வாளர் பெரி.லட்சுமணன், உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் வந்தனர்.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் வீ.சுப்பாராஜ், வட்டாட்சியர் செந்தூர்ராஜன், வருவாய் ஆய்வாளர் அ.பாலசுந்தரம் முன்னிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முன்னறிவிப்பின்றி, அகற்றப்பட்ட பெயர்ப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

0 comments

Leave a Reply