ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம்

Image result for தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்துக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) முற்பகல் 11 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் நடைபெறுகிறது.
எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ தெரிவிக்கலாம்.  இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ள உள்ளார்கள்.
எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள், எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் அதன் விவரங்களையும் கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணப்பட உள்ளதால் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply