ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஸ்ரீவைகுண்டம் » ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாImage result for ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
குருசு கோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன.
10 ஆம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி, காலை 5 மணி, காலை 6 மணி, காலை 7 மணி, காலை 10 மணிக்கு மணப்பாடு பங்குத்தந்தை இருதயராஜ், அலங்காரத்தட்டு பங்குத்தந்தை ஜாண் செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.
முற்பகல் 11 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உப்பு, மிளகு, மலர் தூவி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
தேர் பவனியில் மறை மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் டோமனிஸ், பங்குத்தந்தைகள்  சேசுதாஸ், செல்வன், ஆரோக்கியம், விக்டர்லோபோ, பெஞ்சமின், விக்டர், லூசன், ராபின்சன், அலெக்சாண்டர், ரஞ்சித்குமார் மற்றும் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம் உள்ளிட்ட கடலோர மீனவ மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ரவீந்திரன் மற்றும் அருள்சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நல கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாதவன் தலைமையில், காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உதவி காவல் ஆய்வாளர்கள் ஸ்டீபன், தனலட்சுமி மற்றும் போலீஸார் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply