ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு

Image result for பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வெள்ளிக்கிழமை நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மர்மநபரை  போலீஸார் தேடி வருகின்றனர்.
 தூத்துக்குடி முனியசாமிபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ். தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர். இவரது மனைவி காயத்ரி (31).  இவர்,  வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இளைஞர் ஒருவர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தாராம். பின்னர், கத்தியைக் காட்டி மிரட்டி காயத்ரி அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க நகைகள், ரூ. 3 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவர் வைத்திருந்த செல்லிடப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.  இது குறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 comments

Leave a Reply