ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » ஸ்ரீ அகத்தியர் கோயிலில் ஆடி மாத பூஜை




Image result for பெளர்ணமி சிறப்பு பூஜைதிருச்செந்தூர் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்செந்தூர் சன்னதித் தெருவிலுள்ள ஸ்ரீ அகத்தியர் கோயிலில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அகத்தியர் நாம வழிபாடு, தீபவழிபாடு, திருமுறை பாராயணம், மகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பொதிகை மலை புனித யாத்திரை குழுவினர் மற்றும் செந்தில் பொதிகை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply