ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சுவாதி கொலை வழக்கை ராம்குமாரின் தந்தை சிபிஐ விசாரிக்க கோரிக்கை

Image result for சுவாதி கொலை
மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென, ராம்குமாரின் தந்தை கூறினார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவம்,  செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சுவாதி கொலைக்கும் எனது மகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி தமிழக முதல்வர், உள்துறை செயலர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழக முதல்வர்  இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அப்போது உடனிருந்த ராம்குமாரின் வழக்குரைஞர்கள் ராம்ராஜ், மார்க்ஸ் ரவீந்திரநாத் ஆகியோர் கூறியதாவது: இவ்வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதிலிருந்தே நிறைய குளறுபடிகள் உள்ளன. ராம்குமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கையும் அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுவாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் நட்பு கிடையாது. சுவாதி கொலைக்குப் பின்னர்தான்  ராம்குமார் சுவாதியின் முகநூல் பக்கத்தைப் பார்த்துள்ளார். போலீஸார் பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரிக்காமல் ஒரே கோணத்தில் விசாரித்துள்ளனர். இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றனர்.

0 comments

Leave a Reply