ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரி சிவன் கோயில் ஆனித் திருவிழா நிறைவு பெற்றது.


Image result for ஆறுமுகநேரி சிவன் கோயில்
ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா திங்கள்கிழமை நிறைவு பெற்றது. முன்னதாக, 10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி மற்றும் சுவாமி, அம்பாள் சப்தா வர்ண காட்சி பவனி நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் 27ஆவது ஆனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 1ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும் மாலையும் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது.
10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருசுன்னம் இடித்தல், தீர்த்தவாரி அபிஷேகம்  நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சப்தாவர்ண காட்சியாக ஆறுமுகனேரி நகர வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. சுவாமி திருக்கோயில் வந்தடைந்ததும் ஸ்ரீசண்டேஸ்வரர் பூஜை மற்றும் ஸ்ரீபைரவர் பூஜை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை சுவாமி, அம்பாள், ஸ்ரீநடராஜர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகளை கோயில் அர்ச்சகர் சு.அய்யப்ப பட்டர் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை பக்த ஜன சபையினர், மண்டபகப்படிதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply