ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஸ்ரீவைகுண்டம் » புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

Image result for புனித சந்தியாகப்பர்
ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு, சனிக்கிழமை (ஜூலை 16) காலை 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் குருசுகோயிலில் ஊர்பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசுகோயில் முன்பிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோயில் முன் கொண்டுவரப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை செல்வராஜ் கொடியேற்றினார். இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பங்குத்தந்தை ரவீந்திரன் தலைமையில், பங்குதந்தை ஜேம்ஸ்விக்டர் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.
திருவிழா நாள்களில் தினமும் காலை 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. முக்கியத் திருவிழாவான 10ஆம் திருவிழாவை முன்னிட்டு, ஜூலை 25ஆம்தேதி மணப்பாடு பங்குத்தந்தை இருதயராஜ், அலங்காரதட்டு பங்குத்தந்தை ஜாண் செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளும் வீதியுலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. ஜூலை 26ஆம் தேதி காலையில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

0 comments

Leave a Reply