ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Chennai » நகை கடையில் திருட்டு

Image result for நகை கடையில் திருட்டு
ஆர்.கே.நகர்: நகை கடையில், 16 மூக்குத்திகளைத் திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பாபுலால், 43; கொருக்குப்பேட்டை, கே.எச்., சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு, கடந்த 8ம் தேதி மாலை, 5:30 மணியளவில் வந்த இரு பெண்கள், நகைகளை பார்வையிட்டனர். பின், நகை பிடிக்கவில்லை எனக்கூறி அவசரமாக சென்றனர்.
நகைகளை பாபுலால் சரிபார்த்த போது, 32 கிராம் எடை கொண்ட, 16 மூக்குத்திகள் காணாமல் போனதை அறிந்தார்.
இதுகுறித்த புகாரையடுத்து, ஆர்.கே., நகர் போலீசார், மயிலாடுதுறையைச் சேர்ந்த, சுதா, 35; கும்பகோணத்தைச் சேர்ந்த லோகநாயகி, 54, ஆகியோரை கைது செய்து, மூக்குத்திகளை பறிமுதல் செய்தனர்.
Tags: Chennai

0 comments

Leave a Reply