ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News , ஆறுமுகநேரி , காயல்பட்டினம் » காயல்பட்டினம், உடன்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை திரளானவர்கள் கலந்து கொண்டனர்

காயல்பட்டினம், உடன்குடி, தூத்துக்குடியில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

காயல்பட்டினம் கடற்கரையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில், ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நேற்று காலையில் நடந்தது.

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் நயினா முகமது சிறப்பு தொழுகை நடத்தினார். பள்ளிவாசல் கத்தீபும், ஆயிஷா சித்திகா பெண்கள் அரபி கல்லூரி முதல்வருமான அப்துல் மஜித் குத்பா பேரூரையை நிகழ்த்தினார்.

பள்ளிவாசல் தலைவர் அபுல்ஹசன் கலாமி ஹாஜி, துணை தலைவர்கள் இபுலு சவுது, டி.ஏ.எஸ்.அபுபக்கர், துணை செயலாளர் எல்.கே.கே.லெப்பைதம்பி, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் முர்ஷித், முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி அப்துல் வாஹித் உள்பட சுமார் 2,500 ஆண்களும், 2,500 பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஏழைகளுக்கு உதவிகளை வழங்கினர்.

விழாக்கோலம்

காயல்பட்டினம் குட்டியாபள்ளிவாசல், புதுபள்ளி, அருசியா பள்ளி, மஹ்தும் பள்ளி, முகைதீன் பள்ளி, தாயிம் பள்ளி, காட்டு மொகதும் பள்ளி உள்ளிட்ட 64 பள்ளிவாசல்களிலும், 25 பெண்கள் தைக்காக்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதனால் காயல்பட்டினம் நகரம் விழாக்கோலம் பூண்டது.

உடன்குடி–தூத்துக்குடி

உடன்குடி தாய்ப் நகர் திடலில் இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று காலையில் நடந்தது. இமாம் முகமது முகைதீன் சிறப்பு தொழுகை நடத்தி, மார்க்க உபனியாசம் நிகழ்த்தினார். அரபி கல்லூரி பேராசிரியர் ஹமீது முகமது புகாரி, ஜகாங்கீர், முகமது புகாரி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தூத்துக்குடியில் ரோச் பூங்காவில் முஸ்லிம் அமைப்பு சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- நன்றி தினத்தந்தி

0 comments

Leave a Reply