ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரியில் குற்றாலத்திறற்கு சென்று திரும்பிய 6 பேர் பலி

Image result for ஆறுமுகனேரியில் 6 பேர் பலி
திருநெல்வேலி, : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் வெள்ளாளன் குளம் அருகே கண்டெய்னர் லாரி, 
ஆம்னி வேன் மீதுமோதியதில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி, உடன்குடியை சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பெருமாள்புரத்தை சேர்ந்த உலகநாதன்,52,மு.முருகன்,52, ர.முருகன்,50, உடன்குடி அருகே பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,30, மூலக்கரை பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன்,24, தென் திருப்பேரை அருகே கடையனோடையை சேர்ந்த சங்கர்பாசு,35, ஆகிய ஆறு பேரும், டி.சி.டபிள்யூ கெமிக்கல் ஆலையில் ஓப்பந்த 
தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். ஆறுமுகனேரியில் இருந்து நேற்று முன் தினம் மாலை மாருதி ஆம்னிவேனில் குற்றாலத்திற்கு சென்றனர். இந்த சீசனில் இவர்கள் மூன்றாவது முறையாக காரில் குற்றாலம் சென்றுள்ளனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு நேற்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆம்னி வேனை முத்துக்கருப்பன் ஓட்டி வந்துள்ளார். 
அதிகாலை 2.30 மணியளவில் சீதபற்பநல்லூர் அருகே வெள்ளாளன்குளம் பகுதியில் தூத்துக்குடியிலிருந்து முந்திரி பொட்டு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் 
மோதியது. இதில் லாரியின் அடியில் ஆம்னி வேன் சிக்கிக் கொண்டது. இதில் ஆம்னியில் 
பயணம் செய்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்த ஆலங்குளம் 
தீயணைப்புத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். 
கிரேன் மூலம் ஆம்னி வேன் மீட்கப்பட்டு, அதிலிருந்த உடல்களை மீட்டு திருநெல்வேலி 
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக திருநெல்வேலி தென்காசி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் விபத்துக்குள்ளான 
வாகனங்களை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தி பின்பு மீண்டும் போக்குவரத்து 
துவங்கியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சீதபற்பநல்லூர் போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சுப்புராஜ்,35, என்பவரை கைது செய்து 
விசாரிக்கின்றனர். 
---
இரவு நேர பயணமே 
விபத்துக்கு காரணம் 
குற்றாலத்திற்கு சீசன் நேரத்தில் சுற்றுலா செல்பவர்கள் அருவிகளில் இரவு நேரம் 
குளித்து விட்டு, அதிகாலையில் வீடு திரும்புகின்றனர். அப்படி இரவு முழுவதும் கண் 
விழித்து இருந்து குளித்துவிட்டு, கார் போன்ற வாகனங்களை இயக்கும் போது டிரைவர்கள் 
அயர்ந்து தூங்கி விடுகின்றனர். இதன் காரணமாகவே விபத்து நடந்துள்ளது. இரவு,
அதிகாலை நேரங்களில் இது போன்று சுற்றுலா பயணிகள் காரில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரப்பயணம் தான் ஆறு பேர் பலிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. 
லாரியின் மீது ஆம்னி கார் மோதியதில் கண்டெய்னர் லாரிக்கு அடியில் கார் சிக்கியதால் 
ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 
Tags: arumuganeri

0 comments

Leave a Reply