ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » ஆக. 5இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறைImage result for தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா விருந்து கொண்டாட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றையதினம்   மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும், அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ,  மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல.
இந்த விடுமுறைக்குப் பதிலாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply