ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » பெண் கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பின் தாய், மகன் உள்பட 4 பேர் கைது

Image result for பெண் கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பின் தாய், மகன் உள்பட 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பெண் கொலை வழக்கில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் தாய், மகன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உடன்குடி அருகேயுள்ள வடக்கு காலன்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயபால் மனைவி ஜெயலட்சுமி (55). இவர் கடந்த 21-6-2013 அன்று உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து காட்டுப் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இக் கொலை வழக்குத் தொடர்பாக உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயலட்சுமியின் அண்ணன் கணேசன் மனைவி ஜெயசெல்வி (42), அவருடைய மகன் ராஜுராமநாத ஆதித்தன் (23), உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (30), குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவனணைந்த பெருமாள் என்ற குமார் (30) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து ஜெயசெல்வி தனது வாக்குமூலத்தில் கூறியதாவது: கணவரை இழந்த ஜெயலட்சுமிக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்களை அடையும் நோக்கில் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்று தண்டுபத்து காட்டுப் பகுதியில் வைத்து நான்கு பேரும் சேர்ந்து கொன்றதாக கூறியதாகத் தெரிகிறது.
கைதான நான்கு பேரையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

0 comments

Leave a Reply