ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » மாணவர்களை தாக்கிய 13 பேர் கைது

Image result for மாணவர்களை தாக்கியவர்கள் கைது
சென்னை;புரசைவாக்கத்தில், கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புரசைவாக்கம், பொன்னப்பன் தெருவில், நேற்று முன்தினம் கார் ஒன்று, தாறுமாறாக ஓடி, அங்கு நின்றிருந்த, தனியார் கல்லுாரி மாணவர்கள், முகமது ரியாஸ், 19, முகமது தாகா, 22, மீது மோதியது. இதனால் ஏற்பட்ட தகராறில், காரில் இருந்தவர்கள், அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் மாணவர்களை தாக்கியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேப்பேரி போலீசார், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த, ஷாகுல் அமீது, 36, உள்ளிட்ட, 13 பேரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

0 comments

Leave a Reply