ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக தின வருஷாபிஷேகம் ஜூலை 13 ல் நடக்கிறது.

Image result for திருச்செந்தூர் முருகன்  கும்பாபிஷேக வருஷாபிஷேகம்
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 13 ல் கும்பாபிஷேக வருஷாபிஷேகம் நடக்கிறது.
முருகனின் ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் இரண்டாம் படை வீடு. இங்கு ஆண்டு தோறும் இரு தினங்களில் வருஷாபிஷேகம் நடக்கும். இதில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலும், கும்பாபிஷேகம் நடந்த தினத்திலும் என, இரு வருஷாபிஷேகங்கள் நடக்கும். வரும் ஜூலை 13 ல் கும்பாபிஷேக தின வருஷாபிஷேகம் நடக்கவுள்ளது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதன் பின்பு கலசங்களுக்கு வேள்வி பூஜை காலை 6 மணிக்கு நடக்கும். காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மூலவர் வள்ளி, தெய்வானை, அம்பாள் ஆகிய சன்னிதி விமானங்களுக்கு போத்திமார் மூலமும்,சண்முகர் சன்னிதி விமானத்திற்கு சிவாச்சாரியார் மூலமும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு பட்டாச்சாரியார் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. அன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடக்காது. அன்று இரவு குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply