ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » ரூ.1 கோடி மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல்

Image result for சிகரெட்டுகள் பறிமுதல்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் சரக்கு கப்பலில் பொருள்களுக்கு நடுவே வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைத்து கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதன்கிழமை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலில் இருந்து இறக்கப்பட்ட சரக்குப் பெட்டகம் சிப்காட் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிட்டங்கிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அந்த சரக்குப் பெட்டகத்தில் குறிப்பிடப்பட்ட எடையளவுக்கும், உண்மையான எடையளவுக்கும் இடையே மாறுபாடு இருந்ததால் அந்த பெட்டகத்தைப் பிரித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது சரக்கு பெட்டகத்தில் இருந்த சில அட்டைப் பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிகரெட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும், ஆவணங்களை முழுமையாகச் சோதித்து பார்த்த பிறகே முழு விவரம் தெரிய வரும் என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply