ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது

Image result for திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோயில்
திருச்செந்தூர்  ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை வருஷாபிஷேம் நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, 8.45 மணிக்கு நவக்கிரஹ கும்ப பூஜை, 108 சங்கு பூஜை நடைபெற்றது. காலை 10 மணிக்கு விமான அபிஷேகமும், தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையாகி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் பிரசன்ன பூஜையும், இரவு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. விழாவில்   திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply