ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஏரல் » சாயர்புரம் அருகே உள்ள பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

Image result for பெண்ணை தாக்கிய வாலிபர்
ஏரல், : சாயர்புரம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜெயமுருகன்(35). இவரும் அதே ஊர் கிழக்கு சாமி கோயில் தெருவைச் சேர்ந்த இன்பராஜ் மகன் பத்மநாபனும் வெளியூர்களுக்கு சென்று கபடி விளையாடி வந்தனர். 

கடந்த 17ம் தேதி ஜெயமுருகன் மட்டும் கபடி விளையாட சென்றார். இதனால் ஆத்திரமடைந்த பத்மநாபன், ஜெயமுருகன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ஜெகதீஸ்வரியிடம் (28) உன் கணவர் என்னை கபடி விளையாட அழைத்து செல்லவில்லை என கூறி அவதூறான வார்த்தைகளால் பேசி, தாக்கினார். இதில் காயமடைந்த ஜெகதீஸ்வரி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சாயர்புரம் போலீசில் எஸ்.ஐ ஆதம்அலி விசாரணை நடத்தி பத்மநாபனை தேடி வருகிறார்.
Tags: ஏரல்

0 comments

Leave a Reply