ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » பஸ் கண்ணாடியின் மீது கல்வீச்சு;கல்வீசியவருக்கு காவல் துறை வலை வீச்சு


திருச்செந்தூர் அருகே பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து நேற்று திருச்செந்தூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பரமன்குறிச்சியில் வரும்போது ஒருவர் ஏறினார். அவர் நாலுமூலைக்கிணறு செல்வதற்காக டிக்கெட் எடுத்தார். 

பஸ் அந்த ஊருக்கு வந்ததும் ஸ்டாப்பில் நிறுத்தாமல் சற்று தள்ளி டிரைவர் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணி சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசினார். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசில், பஸ் டிரைவர்  புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) லட்சுமணன், எஸ்ஐ அப்பாத்துரை ஆகியோர் விசாரணை நடத்தி கல்வீசியவரை தேடிவருகின்றனர்.

0 comments

Leave a Reply