ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » மருத்துவக்கல்லூரி மாடியில் இருந்து விழுந்து மாணவர் படுகாயம்


தூத்துக்குடி, 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் 


தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. அவருடைய மகன் பிரவின் (வயது 19). இவர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்.

மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். நேற்று மாலையில் விடுதியில் 3–வது மாடியில், தனது துணிகளை பிரவீன் உலரப் போட்டு இருந்தாராம். காற்று காரணமாக துணி அருகில் இருந்த சிலாப்பில் விழுந்து உள்ளது. அதனை எடுப்பதற்காக சென்று உள்ளார்.

தவறி விழுந்தார் 

அப்போது எதிர்பாராத விதமாக தவறி 3–வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த பிரவின் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply