ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » டூவீலர் மீது லாரி மோதி விபத்து

Image result for டூவீலரில்  தண்ணீர் லாரி விபத்துதிருவொற்றியூர், : டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியாகினர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.எண்ணூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (45). அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் லெட்சுமி (12), மகன் அபிலேஷ் (10). மூவரும் டூவீலரில் நேற்று திருமண நிகழ்ச்சிக்காக கோயம்பேடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். 

எர்ணாவூர் முருகப்பா நகர் அருகே வரும் போது, எதிரே வந்த தண்ணீர் லாரி  டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திர பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்தவர்கள் அபிலேஷ், லெட்சுமி இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லெட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். அபிலேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply