ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Temples » காஞ்சியின் கருவூலம்

காஞ்சியின் கருவூலம்


எத்தனை முறை காஞ்சி சென்றிருப்பேன் என தெரியாது, ஆனால் நான் ஒவ்வொரு முறை செல்லும் போதும் இந்த கோயிலை ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு சென்று விடுவேன், ஒவ்வொரு முறை நான் செல்லும் போதும் கதவுகள் பூட்டியே இருக்கும், என் நண்பர்கள் பலரிடம் இந்த கோயில் குறித்து பேசி இருக்கிறேன், அவர்களுடன் செல்லும் போதும் சரி "இந்த முறை உன் அதிர்ஷ்டம் திறந்திருக்குமா என்று பார்க்கலாம் வா" என்று தான் அழைத்துச் செல்வேன், ஆனால் வழக்கம் போல் பூட்டி இருக்கும், கடந்த சனிக் கிழமை கதவுகள் திறந்திருந்தது, அலி பாபா குகை திறந்திருந்ததை போன்ற ஆனந்தம், உள்ளே சென்று பார்த்தால் சுவர் முழுக்க அற்புதமான சிற்பங்கள்.
காஞ்சிபுரம் என்றதும் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், காமாட்சி கோயில் என மக்கள் குறிப்பாக சில கோயில்களை மட்டுமே சென்று காண்கிறார்கள், காஞ்சி "ஆயிரம் கோயில் நகரம்",, புதிதாக எழுப்பப்பட்ட கட்டிடங்களுக்கு நடுவே பல பொக்கிஷங்கள் மறைந்துள்ளது ஒரு குறுகலான பாதை வழியே சென்றால் இந்த அற்புதமான பல்லவர் கால கோயிலை காணலாம். உங்கள் கண்களில் தென்பட்டு நீங்கள் சென்று பார்த்துவிட்டால் பெரிய அதிசயம் தான், 1200 வருடங்கள் கடந்த பொக்கிஷம், நந்திவர்மன் காலத்தியதாக அறியப்படுகின்றது. இது போன்ற ஒரு வடிவில் கோயில்களை காண்பது அரிது, கீழே நன்றாக மேடேற்றி படிகளின் மீது ஏறிச் சென்று பார்ப்பதைப் போன்ற மாடக் கோயில் அமைப்பு, காஞ்சி பேருந்து நிலையம் அருகே உள்ளது, சட்டென்று கண்களுக்கு புலப்படாது, தேடி அலைந்து கண்டுபிடியுங்கள் சுவாரசியமாக இருக்கும்.
                                                                                                              நன்றி-சசிதரன்[முகநூல்]
Tags: Temples

0 comments

Leave a Reply