ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » சாத்தான்குளத்தில் நடைபெற்று வரும் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை விரைவில் நிறைவு

சாத்தான்குளத்தில் நடைபெற்று வரும் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை பணியானது இன்னும் 2 மாதத்தில் நிறைவடையும் என அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்  தெரிவித்தார்.
சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் ரூ. 1.40 கோடி மதிப்பில் அரசுப்  போக்குவரத்து கழக பணிமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பேருந்து பழுது பார்க்கும் அறை, ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறை மற்றும் பணிமனைக்குத்  தேவையானவை அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியினை தமிழக பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் போலையா, உதவி மேலாளர் சிவன்பிள்ளை ஆகியோரிடம் பணியை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

0 comments

Leave a Reply