ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் சுற்றித்திரிந்த ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்பு

தூத்துக்குடியில் தந்தையின் கொடுமை தாங்காமல் ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு தப்பியோடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜோசப் - மேரி தம்பதியின் மகன் சாமுவேல் (16). இவர், மெஞ்ஞானபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு தேர்வில் 391 மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும் கணிதத்தில் மட்டும் 12 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், மாணவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி, காலில் சங்கிலியால் கட்டி கடந்த இரண்டு மாதங்களாக அவரது தந்தை ஜோசப் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தாராம். இந்நிலையில் மாணவர் சங்கிலியை அறுத்துக் கொண்டு வீட்டிலிருந்து தப்பி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவரை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக இலவச குழந்தைகள் சேவை மையத்துக்கும் புகார் அளித்தனர்.

0 comments

Leave a Reply