ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ஆசியாவின் தலைசிறந்த 50 பல்கலை.,களின் பட்டியலில் சென்னை ஐஐடி

 Image result for ஐஐடி சென்னை
ஆசியாவின் தலைசிறந்த 50 பல்கலை.,களின் பட்டியலில் சென்னை ஐஐடி இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட 13 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 43வது இடத்தை பிடித்துள்ளது. இது தவிர முக்கிய ஐஐடி.,க்கள் பலவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.ஆசியாவின் டாப் 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூரு ஐஐஎஸ்சி (33), மும்பை ஐஐடி (35), டில்லி ஐஐடி (36), கான்பூர் ஐஐடி (48) ஆகியனவும், டாப் 100 பட்டியலில் கரக்பூர் ஐஐடி (51) , ரூர்கி ஐஐடி (78), கவுகாத்தி ஐஐடி (94) ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.இவை தவிர அமிர்தா பல்கலை 169 வது இடத்திலும், ஆந்திரா பல்கலை., 350 வது இடத்திலும் உள்ளன. டில்லி பல்கலை., கடந்த ஆண்டை விட 25 இடங்கள் முன்னேறி 66வது இடத்திலும், கொல்கத்தா பல்கலை., 41 இடங்கள் முன்னேறி 108 வது இடத்திலும் உள்ளன.
17 நாடுகள் இடம்பெற்றுள்ள சிறந்த பல்கலை., கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 50வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. டாப் 350 பல்கலை., பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 23 பல்கலை.,கள் இடம்பெற்றுள்ளன.

0 comments

Leave a Reply