ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » 25 டன் உப்பு சேதம் தூத்துக்குடியில் உப்புக் கிடங்கில் தீ விபத்து

Image result for தீ விபத்து
தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்தவர் குற்றாலிங்கம். இவருக்குச் சொந்தமான உப்புக் கிடங்கு லயன்ஸ்டவுண் உப்பள பகுதியில் உள்ளது. இந்தக் கிடங்கை அம்பேத்கர்நகரை சேர்ந்த ஆசிர்வாதம் குத்தகைக்கு எடுத்து மேற்பார்வை செய்து வருகிறார். உப்பளங்களில் இருந்து எடுக்கப்படும் உப்பு மூட்டைகள் இந்தக் கிடங்கில் வைக்கப்பட்டு, அவற்றை பாக்கெட்களில் அடைப்பது வழக்கம். தற்போது உப்பு உற்பத்தி நேரம் என்பதால், கிடங்கில் ஏறத்தாழ 25 டன் அளவுக்கு உப்பு தேக்கி வைக்கப்பட்டிருந்ததாம்.
இந்நிலையில், உப்புக் கிடங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை திடீரென புகை கிளம்பியுள்ளது. அதைப் பார்த்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
உப்பளத் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு முன்னதாகவே கிடங்கில் தீப்பற்றி எரிந்ததால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், கிடங்கில் இருந்த ஏறத்தாழ 25 டன் உப்பு சேதமடைந்ததாக கிடங்கு குத்தகைதாரர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply