ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » திமுக கவுன்சிலர் பைக்குக்கு தீ வைப்பு சிறுவர்கள் 2 பேரை கைது செய்தனர்


தூத்துக்குடி, : தூத்துக்குடி  சண்முகபுரத்தை சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் கோட்டுராஜா. கடந்த மாதம்  இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 2 பைக்குகள் தீ வைத்து  கொளுத்தப்பட்டன. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரித்து வந்த நிலையில்,  இதில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில்,  அவர்கள் கடந்த மாதம் அப்பகுதியில் சிறிய திருட்டு சம்பவத்தில் ஈடுபட  முயன்றபோது கோட்டுராஜா அவர்களை சத்தம்போட்டு அறிவுரை கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த அவர்கள் கோட்டுராஜாவை பழிவாங்க அவரது பைக்குகளுக்கு தீவைத்துள்ளனர் என தெரியவந்தது.

0 comments

Leave a Reply