ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

Image result for highcourt
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தம் தொடர்பாகவும், இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்திய 10 மாவட்ட சங்கங்களுக்கு பார் கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்ட முடிவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைதொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் நிருபர்களிடம் கூறியதாவது:-சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி  இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில் சுமார் 60 ஆயிரம் வக்கீல்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போராட்டத்திற்கு பின்னரும் சட்ட திருத்தம் தொடர்பாக அறிவிப்பு ஏதும் வரவில்லை எனில் வருகிற 19-ந் தேதி சேலத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும்.

0 comments

Leave a Reply