ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » ஓய்வுபெற்ற பெண் துறைமுக ஊழியரிடம் 12 பவுன் நகையைப் பறித்து சென்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Image result for police arrest handcuffs
தூத்துக்குடி, அண்ணாநகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி கனகமணி (62). தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கனகமணி அதே பகுதியில் உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வியாழக்கிழமை இரவு மில்லர்புரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர், திடீரென கனகமணி அணிந்திருந்த 12 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். கனகமணி கூச்சலிட்டதால், அந்த இளைஞர் நகையை அருகில் இருந்த கழிவுநீர்க் கால்வாயில் வீசி விட்டு ஓடினாராம். இருப்பினும், அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தப்பியோடிய இளைஞரைப் பிடித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் மகேந்திரன் (32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply