ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 11 பள்ளிகளை மூட நடவடிக்கை -மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்

 தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறையின் அனுமதியின்றி செயல்பட்ட காயல்பட்டினம் பாத்திமா மழலையர் பள்ளி, புதுக்கோட்டை பி.ஆர்.ஆர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கோவில்பட்டி மகாத்மா  மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி  ஆகிய பள்ளிகள் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி  கல்வித் துறையால் மூடப்பட்டது.
அதன்படி, தற்போது அனுமதியின்றி செயல்படுவதாக 11 பள்ளிகள் கண்டறியப்பட்டு முதல்கட்டமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையாக மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்குள் அனுமதி பெறாவிட்டால் அந்த பள்ளிகள் அனைத்தும் மூடப்படும்.
அதன்படி,  காயல்பட்டினம் பெஸ்ட் ஒன் குரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,  விளாத்திகுளம் ஸ்ரீ விவேகானந்தர் வித்யாலய பள்ளி,  பண்ணைவிளை சேவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,  ஏரல் இம்மானுவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல,  சிவகளை பாரதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,  மறவன்மடம் அமிர்தா வித்யாலய சிபிஎஸ்சி பள்ளி,  கூட்டுடன்காடு கிட்ஸ் பிளே ஸ்கூல்,  புதுக்கோட்டை ராமசந்திராபுரம் லலிதா வித்யாயாஸ்ரம் சிபிஎஸ்சி பள்ளி,  சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி ராஜீவ்நகர் டிவிங்கிளிங்  கிட்ஸ் பிளே ஸ்கூல் ஆகிய பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்..

0 comments

Leave a Reply