ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. டெல்லியில் மத்திய, மாநில அரசுகள் இனி டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது


தற்போது டெல்லியில் மத்திய, மாநில அரசு அலுவலங்களில் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகனங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளன. இதனால் தலைநகர் டெல்லியில் காற்றில் அதிக மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக பரவலாக கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. டெல்லியில் மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய இலாகாக்களில் பயன்படுத்துவதற்கு இனி டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் அரசு இலாகாக்கள் வாங்கும் டீசல் வாகனங்கள் மீது எந்த பதிவும் இருக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

காற்று மாசு அடைவதை தடுக்கும் வகையில் டெல்லி மாநில அரசு ஒரு நாள் விட்டு ஒருநாள் வாகனங்களை இயக்குவதற்கு கொண்டு வந்துள்ள திட்டம் அதன் நோக்கத்தை அடைய உதவாது என்றும் ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தால் டெல்லி நகரவாசிகள் ஒவ்வொருவரும் 2 கார்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்து இருக்கிறது.

0 comments

Leave a Reply