ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » எட்டையபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த நாள்

மகாகவி பாரதியாரின் முற்போக்கு சிந்தனைகளை இளைய சமுதாயத்தினர் பின்பற்ற வேண்டும் என‌ மாவட்ட ஆட்சிய‌ர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்,எட்டையபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று பாரதியார் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மாவட்ட ஆட்சிய‌ர் ரவிகுமார் மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் அவர்கள் பேசும் போது: பார் புகழும் மகாகவி பாரதியார் அவர்களின் 134வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அவர் பிறந்து வாழ்ந்த ஊரான எட்டையபுரத்தில் அவரது மணிமண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு 100 ஆண்டுகளுக்கு முன்பாக பெண்கள் முன்னேற்றம் குறித்தும் சாதி, மத பேதங்கள் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசியவர். 

குறிப்பாக குழந்தை பருவத்திலேயே அனைவரும் சமம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திட வேண்டும் என்று நினைத்து ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம் என பாடினார். 39வது வயது வரை வாழ்ந்த பாரதியார் 10 ஆண்டுகள்; ஆங்கிலேய அரசின் அடக்கு முறை காரணமாக பாண்டிச்சேரியில் வாழ்ந்தார். பிறரை போன்று 90 வயது வரை பாரதியார் வாழ்ந்து இருந்தால் எண்ணற்ற புரட்சிகர, சமுதாய முற்போக்கு சிந்தனைகளை மக்களிடத்தில் ஏற்படுத்தி இருப்பார். அவரது நினைவாக மணிமண்டபம் 1947ம் ஆண்டில் கட்டப்பட்டு  1981ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. அவர் பிறந்து வாழ்ந்த வீடும் அதே முறையில் இன்று வரை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
தேசபற்று,மொழிப்பற்று மிக்கவராக திகழ்ந்த மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு  தமிழ்மொழிக்காக அவர் ஆற்றிய தொண்டு, தேசபற்றை பொது மக்களிடையே ஏற்படுத்த அவர் எழுதிய கவிதை, கட்டுரைகள் இம்மணிமண்டபத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.எனவே இளைய சமுதாயத்தினர் மகாகவி பாரதியாரின் முற்போக்கு சிந்தனைகளை கடைப்பிடித்து நாட்டுபற்று மிக்கவர்களாகவும், மொழிப்பற்று மிக்கவர்களாகவும் திகழ வேண்டும் என்று உரையாற்றினார்.

0 comments

Leave a Reply