ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » விவேகானந்தா கேந்திரம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு போட்டியும்;பரிசளிப்பும்

சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் இந்து தொடக்கப்பள்ளியில் வள்ளியூர் விவேகானந்தா கேந்திரம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கதை சொல்லுதல், ஒப்புவித்தல், இசை, நினைவாற்றல், வினாடி-வினா, ஓவியம், பேச்சு ஆகிய பண்பாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 14 பள்ளிகளில் இருந்து 279 மாணவர்களும், 26 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். பின்னர் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. 

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். சாத்தான்குளம் மாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி கணக்காளர் சேகர் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ஜோசப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். 

இதில் விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி, சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செசுபிரபா, தூய இருதய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரோசாலி விஜிதா, பன்னம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் தவசிமுத்து ஆகியோர் பேசினர். கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட விவேகானந்த கேந்திர பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விவேகானந்த கேந்திர மேற்பார்வையாளர் சண்முகபாரதி நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply