ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » வெள்ளநீர் தேங்கி 15 நாட்களாகியும் வெளியேற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடியில் வெள்ளநீர் தேங்கி 15 நாட்களாகியும் வெளியேற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில்  பெய்த கன மழையால் கடந்த 23ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முத்தம்மாள்  காலனி சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வெள்ள நீர்  வெளியேற்றப்படாமல் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. கரும்பச்சை நிறத்துக்கு தண்ணீர் மாறி துர்நாற்றம் வீசுகிறது. கால்நடைகள்   செத்து மிதப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. 

0 comments

Leave a Reply