ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேட்டரி கார் வசதி- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளுக்காக பேட்டரி கார் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள பேட்டரி காரை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வழங்கியுள்ளது. இந்த வாகனத்தை நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு செய்யும் நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திர காமத், பேட்டரி காரை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார். மருத்துவமனை டீன்  பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் , மருந்தகத் துறைத் தலைவர் , மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பேசினர்.
இந்த பேட்டரி கார் 9 நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இருக்கைகள் கொண்டுள்ளது.
விபத்து சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகியவற்றில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பரிசோதனைக் கூடம், அறுவை சிகிச்சை கூடம் மற்றும் இதர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நடக்க இயலாத நிலையில் உள்ள நோயாளிகள், முதியோர்களுக்கு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு அழைத்துச் செல்லவும் இந்த வாகனம் உதவியாக அமையும்.
மருத்துவமனையின் பொன்விழா ஆண்டில் சிறப்பு சேர்க்கும் வகையில், நோயாளிகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply