ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » மாலத்தீவு, அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Image result for வெள்ளம்

மாலத்தீவு, அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து,  வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
குமரிக் கடல் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மாலத்தீவு, அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் தாழ்வு நிலையாகவே நீடிக்கிறது.
இந்த நிகழ்வின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை இருக்கும்.
கணினி சார்ந்தக் கணிப்பின்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் விட்டு விட்டு மழை பெய்வதோடு, சில நேரங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகப்பட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 200 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்தப்படியாக, காரைக்காலில் 190 மி.மீட்டரும், நாகை மாவட்டம் மணல்மேட்டில் 170 மி.மீட்டரும், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 150 மி.மீட்டரும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 140 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Image result for வெள்ளம்
மேலும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 130 மி.மீட்டரும், திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 120 மி.மீட்டரும், கடலூர் மாவட்டம் பண்ரூட்டி, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, நாகை மாவட்டம் சீர்காழி, ஆணைக்காரன்சத்திரம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், தொழுதூர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 110 மி.மீட்டரும், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 100 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியைத் தாண்டி பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகத்தில் சராசரியாக 47 செ.மீ. மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளார். .

0 comments

Leave a Reply