ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு கல்லூரி தேர்வு: பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கவில்லை

தொடர் மழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக, தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி தேர்வுகளை பெரும்பாலான மாணவர்கள் எழுத முடியவில்லை. எனவே, அவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர் மழை எதிரொலியாக தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் திங்கள்கிழமை தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி சாயர்புரம் போப் கல்லூரி, மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வஉசி கல்லூரி, ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, செயின்ட் மேரீஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்வில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் நலன் கருதி திங்கள்கிழமை நடைபெற்ற தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு தனியே துணைத் தேர்வு நடத்த சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் என கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

0 comments

Leave a Reply