ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ஆறு அற்புதமான புதிய சேவைகள் தொடங்கப்பட்டன

Image result for டிஎம்பி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆறு புதிய சேவைகள் அறிமுகவிழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆறு புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, மேலும் எளிதான டிஜிட்டல் வங்கி சேவை அளிக்கும் வகையில் RuPay பிளாட்டினம் டெபிட் கார்டு, முத்ரா கார்டு, விர்ச்சுவல் /ப்ரீபெய்ட் கார்டு, டேப்ளட் பேங்கிங் (Tablet Banking), இணையவழி சேமிப்பு கணக்கு / வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) கணக்கு துவங்கும் வசதி, மற்றும் ஏடிஎம் மையம் வாயிலாக கோவில்களுக்கு நன்கொடை அளிக்கும் வசதி ஆகிய 6 புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
.
தூத்துக்குடியில் உள்ள டிஎஸ்எப் க்ராண்ட் ப்ளாசா ஹோட்டலில் வைத்து இப்புதிய சேவைகளின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உபேந்திர காமத்  தலைமை தாங்கினார். வங்கியின் பொதுமேலாளர் குணசேகரன்  வரவேற்புரையாற்றினார். நேசனல் பேமன்ட்ஸ் கார்பரேசன் ஆப் இந்தியா  தலைவர், பாலச்சந்திரன் இப்புதிய சேவைகளை துவக்கிவைத்தார். ஆல் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ் & இன்டஸ்ட்ரீஸ் தலைவர் ராஜா சங்கரலிங்கம், தூத்துக்குடி  முதல் RuPay ப்ளாட்டினம் டெபிட் கார்டினை பெற்றுக் கொண்டார்.

VNMAD நிறுவனம்  பங்குதாரர், பாலமுருகன், முதல் முத்ரா கார்டினை பயனாளிகளுக்கு வழங்கினார். புதிய RuPay ப்ளாட்டினம் டெபிட் கார்டுகள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில், வங்கியின் பொதுமேலாளர், (தகவல் தொழில்நுட்பத்துறை) நாயகம்  இப்புதிய சேவைகளில் உள்ள வசதிகள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கினார்.

இவ்விழாவில், வங்கியின் இயக்குநர் அரவிந்த குமார், பொதுமேலாளர்கள் கந்தவேலு, தேவதாஸ், ரவீந்திரன், துணை பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

0 comments

Leave a Reply