ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஏற்கெனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் இந்த உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்களாவர். மூன்றாண்டுகளுக்கு மட்டும் பயபறுவதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
 திட்டத்தில் பயன்பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.  30.9.2010-கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.  பயன்தாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இந்தத்திட்டத்தில் பயன்பெற எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது.
தகுதியுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், அலுவலக வேலை நாளில், வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உடல்ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் நவ.26 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply