ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» USEFULL TO ALL » தினசரி காலாற நடக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு பக்கவாதப் பிரச்சினைகள் வராது

Image result for நடைப்பயிற்சி
பொதுவாக தினசரி காலாற நடக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு பக்கவாதப் பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கருத்து. இது எல்லா வயதினருக்கும் பொருந்தும். 
  • ஒரு நபர் ஒரு வாரத்தில் 4 முதல் 7 மணி நேரம் நடந்தால் 11 சதவிகிதமும், 8 முதல் 14 மணி நேரம் நடந்தால் 37 சதவிகிதமும் குறைவாகவே பக்கவாதப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வல்லுனர்களின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
  • மேலும் ஒரு வாரத்தில் 22 மணி நேரம் நடப்பவராக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு பக்கவாதப் பிரச்சினைகள் தடுக்கப்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • இதி்ல் நடப்பது மட்டுமே முக்கியம்; எவ்வளவு வேகமாக அல்லது எவ்வளவு மெதுவாக நடக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.
  • நம்மால் செய்ய முடிந்தது தினசரி நடப்பதுதான். எவ்வளவு அதிகம் நடக்கிறோமோ அவ்வளவும் நல்லது.
  • மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகு, வாரத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரமாவது நடப்பதற்கு முயற்சி செய்யலாம்.

0 comments

Leave a Reply