ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » குலசேகரன்பட்டினம் ;பக்தர்கள் போடும் உண்டியல் பணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கொஞ்சம் சுகாதாரம் தந்தால் நல்லது.

Image result for குலசைImage result for குலசை
குலசேகரன்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவுப் பொருள்களை அகற்றாததால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குலசேகரன்பட்டினத்தில் தசரா விழாவில் லட்சக்கணக்கான கலந்து கொண்டனர். பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகள், தசரா வேடப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கழிவுகள் அகற்றப்படாமலேயே உள்ளது வேதனைக்குரியது.
தற்போது பெய்த மழையால் இக்குப்பைகளில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் முத்தாரம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பக்தர்கள் போடும் உண்டியல் பணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கொஞ்சம் சுகாதாரம் தந்தால் நல்லது.

0 comments

Leave a Reply