ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » பாடகர் கோவனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

Image result for கோவன்
பாடகர் கோவனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 மக்கள் கலை, இலக்கியக் கழகத்தின் கலைக்குழு பொறுப்பாளராக இருப்பவர் பாடகர் சிவதாஸ் என்கிற கோவன். இவர், மதுவிலக்கு பிரசாரப் பாடலை எழுதி, இசையமைத்துப் பாடினார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வெளியானது.
 இதையடுத்து கோவன் மீது சென்னை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, கோவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 இதையடுத்து, அவரை இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னைப் பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோவன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
 இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவனை இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி கோவன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவனுக்கு ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
 

0 comments

Leave a Reply