ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் கன மழையால் இந்த மூன்று மாவட்டங்களிலும் பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. பல இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை.
மழை காரணமாக இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 7 ஆம் தேதி இயங்கவில்லை.
இதனால், தலைநகரையொட்டியுள்ள மூன்று மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

0 comments

Leave a Reply