ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரியில் காவலர் குடியிருப்பு கட்டும் பணி தொடங்கப்பட்டது.


ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தில் காவல்துறைக்குச் சொந்தமான 1.55 ஏக்கர் நிலத்தில் காவலர் குடியிருப்பு கட்ட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. ஆறுமுகநேரி காவல் நிலையம் 80 காவலர்களை கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுமுகனேரியில் போலீஸ் குடியிருப்பு கட்ட தமிழக முதல்வர் நிதி ஒதிக்கீடு செய்தார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.7.75 கோடியில் அடுக்கு மாடி  குடியிருப்பு கட்டப்படுகிறது. 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 73 காவலர்களுக்கு என மொத்தம் 79 வீடுகள் கட்டப்படுகின்றன.
 பூமி பூஜை பெருமாள்புரத்தில் அவ்விடத்தில் நடைபெற்றது. பூமி பூஜையைத் தொடர்ந்து ஆறுமுகனேரி ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் புதிய கட்டடப் பணிகளை தொடங்கி வைத்தார். உதவி ஆய்வாளர் மாடசாமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் ரகு, காவலர் வீட்டுவசதி வாரிய பொறியாளர் சரோஜா மற்றும்  பலர்  கலந்துகொண்டனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply