ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ஜாதியை குறிக்கும் வண்ண கயிறுகள் குறித்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி வேறுபாடுகளை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் கைகளில் கட்டப்படும் வண்ணவண்ண கயிறுகள் குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை குறிக்கும் வகையில் சிவுப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஆரஞ்ச் நிற கயிறுகளை கைகளில் கட்டய நிலையில் பள்ளிக்கு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் மாணவர்களின் நெற்றியிலிடும் திலகங்களிலும், ஜாதிக்கு ஏற்றவாறு வேறுபாடு காணப்படுவதாகவும் கூறப்பட்டது.
திருநெல்வேலி டவுனில் உள்ள ஒரு பள்ளியில் தலித் மாணவர் ஒருவர் வேறு ஒரு ஜாதிக்குரிய வண்ண திலகத்தை வைத்து வந்ததால், மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவர்கள் வண்ண கயிறுகளை கட்டி வருவதற்கு தடை விதிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், எழுத்துபூர்வமாக எவ்வித அறிவிக்கையும் வெளியிடவில்லை என தெரிகிறது.
மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் இச்சம்பவங்கள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலர், சமூகநல அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரண்டு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி. முருகேசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

0 comments

Leave a Reply