ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » டெங்கு காய்ச்சலை முதலிலேயே கண்டறிந்தால் அதை முற்றிலும் குணப்படுத்தலாம்.

Image result for dengue
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி பெய்து வருகிறது. மழைக்காலம் காரணமாக சில வகை காய்ச்சல் மக்களை தொற்றிக் கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த காய்ச்சல் என்றாலும் உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை நாடுங்கள். ஆஸ்பத்திரிக்கு சென்றதும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதற்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் எல்லாவித காய்ச்சலுக்கும் போதுமான மருந்துகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் என்றாலும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் அந்த நோயை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன.
நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள அணுக்கள் குறைந்தால் அதை நிவர்த்தி செய்ய முடியும். போதுமான மருத்துவ வசதிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் உ ள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. டெங்கு காய்ச்சலை முதலிலேயே கண்டறிந்தால் அதை முற்றிலும் குணப்படுத்தலாம்.
நான் சொல்வது நோய் வரும் முன்பே விழிப்புணர்வாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசு நல்ல தண்ணீரில் வளரக்கூடியது. எனவே வீடுகளிலும், கட்டிடம் கட்டும் இடங்களிலும் அல்லது எந்த இடமாக இருந்தாலும் மழை நீர் தேங்கி கிடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
டெங்கு காய்ச்சல் என்று யாரும் பீதி அடையவேண்டாம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு போதிய மருந்துகள் உள்ளன.
இப்போது நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்வோமே!
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:
* தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை காய்ச்சல்
* திடீரென காய்ச்சல் அதிகமாகுதல்
* தலைவலி, கழுத்து வலி, உடம்பு வலி
* பித்தப்பை வீங்கி மூச்சுவிட கஷ்டப்படுதல்
* வயிறு உப்புசம், தோல் தடிப்பு
* தோலில் எரிச்சல், வாந்தி
* உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது
* மூக்கு மற்றும் பல், ஈறுகளில் ரத்தக் கசிவு
கொசுக்கள் பெருக்கம் தவிர்க்க
நிழலில் காயவைக்கப்பட்ட நொச்சி, நிலவேம்பு, வேப்பிலை இலைகளை மஞ்சளுடன் சேர்த்து சாம்பிராணி புகை போடுவதைப் போல, வீடு முழுக்க பரப்ப, கொசுவின் உற்பத்தி குறைவதுடன், நம் சுவாசத்துக்கும் வலு சேர்க்கும்.
இயற்கை பூச்சிக் கொல்லியான பஞ்ச கவ்யத்தை (பால், தயிர், நெய், சாணம், கோமியம் சேர்ந்த கலவை) வீட்டைச் சுற்றி தெளித்தால் கொசுக்களின் எண்ணிக்கை குறையும்.
வேப்பிலை, நிலவேம்பு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு கொதிக்கவைத்து, வீட்டைத் துடைத்தும், வீட்டில் தெளித்தும் பயன்படுத்தினால், கொசுவின் இனப்பெருக்கம் குறையும்.
பேய் விரட்டிச் செடியின் வாசனைக்குக் கொசு நெருங்கவே நெருங்காது. அதனால், வீட்டிற்கு ஒரு நிலவேம்பு, நொச்சி, பேய்விரட்டி போன்ற செடிகளை வளர்க்கலாம்.
முக்கியமாக பகலில் கொசு கடியிலிருந்து கண்டிப்பாக தப்பித்தல் முக்கியம் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகலில் தான் வீரியத்துடன் இருக்கும்
டெங்குவை பரவாமல் தடுக்க ;
* டெங்கு கொசுவின் வாழ்விடமே, சுத்தமான நீர் தேங்கும் இடம்தான். எனவே, வீட்டுக்குப் பயன்படுத்தும் நல்ல நீர் நிரம்பிய பாத்திரங்களை நன்றாக மூடிவைக்கவும்.
* மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கொசு புகாதவாறு பாதுகாப்பாக மூடிவைக்கவும். அதோடு, வாரம் ஒருமுறை சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.
* வீட்டைச் சுற்றி நீர் தேங்கியுள்ள இடங்களில் 30 மி.லி பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெயை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க, கொசுவின் லார்வாக்கள் இறந்துவிடும்.
* கிணறுகளில், சிறுசிறு மீன்களை விடலாம். அது கொசுவின் லார்வாக்களைத் தின்றுவிடும்.
* தேவையற்ற பொருட்களை, வீட்டின் உள்ளே அல்லது வெளியே சேமித்துவைத்து, கொசுவை விருந்தாளியாக அழைப்பதை விட, ஒரேயடியாக அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள்.
* செப்டிக் டேங்க், வென்டிலேஷன் குழாய் போன்ற இடங்களில் நைலான் வலைகளைக் கட்டி, கொசு உள்ளே புகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* வீட்டின் தோட்டம், ஜன்னல், பழைய பொருட்கள் இருக்கும் இடம், டயர் இருக்கும் இடம் போன்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
டெங்கு காய்ச்சலுக்கு மருந்து ;
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு மிகச் சிறந்த மூலிகை. நிலவேம்பு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி, டெங்கு வைரஸ் தாக்கத்தினால், கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களைக் களைந்து, கல்லீரலைப் பலப்படுத்தும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் கொடுக்கக் கூடாது.
பப்பாளி இலையின் நரம்புகளை நீக்கி, சுத்தமான தண்ணீரில் இலையைக் கழுவி நீர்விடாமல் அரைத்து, சுத்தமான துணியில் சாறு பிழிய வேண்டும். 10, 15 மி.லி சாறுடன் தேன் கலந்து குடித்துவர, டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.
நிலவேம்பு இலைகளை, மிளகு மற்றும் இஞ்சியுடன் சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். இதன் கசப்புத் தன்மையைக் குறைக்க, கொஞ்சம் தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவரலாம்.
நீங்கள் ஏற்கெனவே அலோபதி மருந்து எடுத்துக்கொண்டிருந்தாலும் வேறு வியாதிகளுக்காக மருந்து எடுத்தாலும் பயமின்றி இந்த மருந்துகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்
வரும் முன் தடுக்க ;
200 மி.லி தண்ணீரில் நிலவேம்பு கஷாய பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்சவேண்டும். நீர் கொதித்து 50 மி.லியாக, வற்றியதும் வடிகட்டி மிதமான சூட்டில் உணவிற்கு முன்பாக பருக வேண்டும். தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் ஒன்று அல்லது இரண்டு வேளை
கிடைக்கும் இடம் ;
அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாகவும் , சித்தா மருந்து விற்பனை கடைகள் , நாட்டு மருந்து விற்பனை கடைகளில் விலைக்கும் கிடைக்கும் .
Tags: arumuganeri

0 comments

Leave a Reply