ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது..

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வியாழக்கிழமை மாலை முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது..
பெரம்பூர், வியாசர்பாடி, என்னூர், தி.நகர், ஓட்டேரி, கிண்டி, மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புழல் பகுதியில் அதிகபட்சமாக 21 செ.மீ மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. தரமணி, கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை - பெங்களூரு இடையேயான பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
       சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில், விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

      

0 comments

Leave a Reply