ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » மடிப்பாக்கத்தில் உள்ள ஏரி நிறைந்து நீர் வெளியேறி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஏரி நிறைந்து நீர் வெளியேறி வருவதால் அந்தப் பகுதியில் வாழும் மக்களிடையே அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னையின் புறநகரில் உள்ள மடிப்பாக்கம் ஏரி நிறைந்து நீர் பெரிய அளவில் வெளியேறி வருகிறது. இதைத் தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளைப் போட்டு தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஏரி உடைந்தால் அதைச் சுற்றி வசிக்கும் சுமார்  10,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்றும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், வானிலை ஆய்வு மையமும் மழை இருக்கும் என்று தெரிவித்து இருப்பதால், இந்த ஏரியின் நிலைமை குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply