ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » மாதம் ஒரு முறை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்காததற்கு விவசாயிகள் எதிர்ப்பு

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்காதது ஏன் எனக் கேட்டு, விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் , மாவட்ட வருவாய் அலுவலர்  ஆகியோர் பங்கேற்கவில்லை. திருச்செந்தூர் வருவாய்க் கோட்டாட்சியர்  தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.பி. பெருமாள், விவசாயிகள் கந்தசாமி, எட்டயபுரம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசும்போது, "மாதம் ஒருமுறை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்காதது ஏன்?' எனக் கேட்டு, "ஆட்சியர் வந்தபிறகே கூட்டத்தைத் தொடங்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய திருச்செந்தூர் வருவாய்க் கோட்டாட்சியர், "கழுகுமலை பகுதியில் பலத்த மழையால் நீர்நிலைகள் உடையும் அபாயம் உள்ளதால் பணிகளை மேற்கொள்ள ஆட்சியர் சென்றிருப்பதாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் விடுமுறையில் சென்றிருப்பதாகவும்' தெரிவித்தார்.
கூட்டத்தின்போது, கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி, உளுந்துப் பயிருடன் வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டார். அப்போது அவர், "தான் பயிரிட்ட உளுந்துப் பயிருக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் விதைச் சான்று வழங்க மறுப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.
கோவில்பட்டி அருகேயுள்ள கொடப்பாறை, புளியங்குடி பகுதிகளில் விவசாய நிலங்களில் பட்டாசு ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் இதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டாசு ஆலை வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

0 comments

Leave a Reply