ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வசந்த் & கோ நிறுவனத்தின் சார்பில் பெரீஸ் பிஸ்கட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை
நினைவு படுத்தும் சென்னை...
சுதந்திரப் போராட்ட காலத்தில், சாப்பாட்டுக்கு வழி இருக்காது... அப்போது, உணவுத்தேவையைப் பூர்த்தி செய்தது ரொட்டித் துண்டுகள் தான். அப்படிப்பட்ட காலகட்டத்தில், களத்தில் நின்ற உணர்வாளர்களுக்கு பெரிதும் பசி ஆற்றிய உணவு எது தெரியுமா?
மதுரை வட்டாரத்தில் தயாரிக்கப்பட்ட பெரீஸ் பிஸ்கட்கள் தான். 
இன்றைக்கும், 60, 70 வயதுகளைக் கடந்தோரைக் கேட்டால், இதன் வரலாறு தெரியும். சுதேசி நிறுவனமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அத்தகைய பிஸ்கட் கம்பெனிகள், பல வெளிநாட்டு கம்பெனிகளால் மறைக்கப்பட்டன. பெரு முதலைகளோடு போட்டியிட முடியாத பெரீஸ் போன்ற சுதேசி கம்பெனிகள், தன்னளவில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய சூழலில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வசந்த் & கோ நிறுவனத்தின் சார்பில் பெரீஸ் பிஸ்கட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோக், பெப்சியைத் தவிர்த்து, பவண்டோ போன்ற உள்நாட்டு பதார்த்தங்களுக்கு மக்கள் திரும்பி வரும் நிலையில், இத்தகைய உள்நாட்டு பிஸ்கட்கள் மீண்டும் மார்க்கெட்டைப் பிடிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை...
இன்றும் அந்நிறுவனத்தைத் திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் பா. மகேந்திரவேல் ‪#‎PandianMahendravel‬ அவர்களுக்கு வாழ்த்துகள்...

0 comments

Leave a Reply